Thursday, May 7, 2020

குர்ஆன் எனும் அற்புதம் - #01

اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ‏
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
(அல்குர்ஆன் : 75:3)

بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
(அல்குர்ஆன் : 75:4)

மேற்கூறப்பட்ட இரு வசனங்களில் இருந்து பல படிப்பினைகள் மனித சமுதாயதுக்கு கிடைக்கப்பெறுகிறது. எவ்வாறு ஒரு கர்ப்ப பையிற்குள் செலுத்தப்பட்ட விந்து துளிகள் முட்டை கலத்தை அடைந்து கருக்கட்டி, பிறகு ஒரு இரத்தக்கட்டியாக மாறி பின்னர் ஒரு குழந்தையாக படைக்கப்படுகிறது என்பதை சிந்திக்க முடியாமல் உள்ளதா? குர்ஆனில் பல இடங்களில் இது சொல்லப்படுகின்றது. 

இன்றைய உலகில் biometric identification முறை பல்வேறு இடங்களில் பயன்படுத்த படுகின்றது. இதில் மிகவும் முக்கியாமன biometric identification முறையாக பொதுவாக fingerprints ஐ ஸ்கேன் பண்ணும் முறையே உள்ளது. இந்த முறையில் கை விரலில் உள்ள ரேகைகள் ஸ்கேன் செய்யப்படுகிறது ஏனெனில் உலகில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் இனி வரப்போகும் மனிதர்களின் கை ரேகைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசமாகவே இருக்கும். இதன் மறுதலை ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையான அமைப்புகள் கொண்டிருக்கின்றான். இற்றைக்கு விஞ்ஞானம் என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் அதாவது 1400 வருடங்களுக்கு முன்னரே துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது வசனத்தின் ஆணித்தரமான கருத்தாக இறைவன் மீண்டும் அனைத்து மனித சமுதாயத்தையும் மீண்டும் உயிரூட்டி எழுப்புவான் என்பது திண்ணமாகின்றது.

ஆர்கே.