Sunday, August 12, 2012

வானவர்கள்

மலக்குகள் எனும் புதிய படைப்பு

அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்தாம் படைத்துப்பரிபாலிக்கும் இந்தப் பரந்து விரிந்த பிரஞ்சத்திலே தமதுவிருப்பத்திற்கேற்ப பல்வேறு விதமான படைப்பினங்களைப்படைத்துள்ளான். இன்னும் ஏன்நம்மைப் படைத்தவனும்அவன்தான். இவ்வகையில்வானங்கள் மற்றும் பூமி முழுவதும்பரவியிருக்கும் படைப்பினங்களின் மொத்த எண்ணிக்கையைஅல்லாஹ்வைத் தவிர அறிந்தவர் எவருமில்லை.

நீர் வாழ்வனநில வாழ்வனகாற்றில் வாழ்வன என்று பெரும்பட்டியல் போடும் மனிதர்களின் தேடல் பார்வையில்பட்டிருப்பதோ ஒட்டுமொத்தப் படைப்பினங்களின் தொகையில்சொற்பத்திலும் சொற்பம்தான் என்பதை எவரும் மறுக்கமுடியாது. இவ்வாறு நாம் அறிந்துள்ளதைதலைநிமிர்ந்து நிற்கும்சிகரத்தில் இருக்கும் ஒற்றைத்துகள் என்று குறிப்பிட்டாலும்மிகையாகாது. இப்படியிருக்கநமது ஐம்புலன்களுக்கு தெரியாதஇடத்திலும் விதத்திலும் எத்தனை விதமான படைப்புகள்இருக்கும் என்று கொஞ்சம் கற்பனைக் குதிரையைவிரட்டிப்பாருங்கள்சிந்தனைச் சாட்டையை சுழற்றிப்பாருங்கள்.இப்படிநம்மால் பார்க்க முடியாத விதத்தில் இருக்கும்வாழ்வினங்களுள் ஒன்றுமலக்குகள் என்ற இனம்.


இந்த இனத்தைப் பற்றி இஸ்லாம் சொல்லும் விஷயங்களைஇனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

வானவர்களை நம்புதல்
"மனித இனத்தைப் படைப்பதற்கு முன்பாகவே மலக்குகள் என்றஒரு இனத்தை அல்லாஹ் படைத்துள்ளான்' என்றுமுஸ்லிம்களாகிய நாம் கண்டிப்பாக நம்பவேண்டும்.அப்போதுதான் நாம் முழுமையான இறைநம்பிக்கைக்கொண்டவர்களாக இருக்க முடியும். ஏனெனில், அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களைப் பின்பற்றும் மக்களும்மலக்குமார்களை நம்பிக்கைக் கொள்பவர்களாக இருக்கவேண்டும் என்று இறைவன் தமது இறைமறையில்தெரிவித்துள்ளான். அவ்வாறு நாம் நம்பவில்லை எனில்பாரதூரமான வழிகேட்டில் விழுந்தவர்களாக மாறிவிடுவோம்என்றும் அவன் நம்மை எச்சரித்துள்ளான். இப்போது இதற்கானஆதாரங்களைக் காண்போம்.

இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்குஅருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கைக் கொண்டோரும் (இதைநம்பினார்கள்). அல் லாஹ்வையும், மலக்குகளையும், அவனதுவேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும்நம்பினார்கள். 
(திருக்குர்ஆன் 2 : 285)

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனதுதூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும்,இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்!அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், அவனதுதூதர்களையும், இறுதி நாளையும் ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.
(திருக்குர்ஆன் 4 : 136)

கிழக்கையோ மேற்கையோ நோக்கி உங்களுடைய முகங்களைத்திருப்புவது (மட்டும்) நற்பணி அன்று. ஆயினும்,நற்செயல்புரிவோர் (இவர்களே. அவர்கள்) அல்லாஹ்வையும்இறுதி நாளையும் மலக்குகளையும் வேதங்களையும்நபிமார்களையும் உறுதியாக நம்புவர். 
(திருக்குர்ஆன் 2 : 177)

மலக்குகளை நம்பிக்கைக் கொள்வது கட்டாயம் என்பதைமுன்சென்ற மூன்று வசனங்களின் மூலம் தெரிந்துகொண்டோம்.அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளும் இறைவிசுவாசிகளானமுஸ்லிம்கள் அவனால் படைக்கப்பட்ட மலக்குமார்களையும்நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களும் நமக்கு நன்முறையில் போதித்துள்ளார்கள்.அவ்வாறு அறிவுரை வழங்கியதோடு நின்றுவிடாமல் தமதுசொல்லுக்கு முன்மாதிரியாக திகழும் விதத்தில் நபிகளாரும்மலக்குமார்களை நம்பியவர்களாக இருந்தார்கள். இந்தப்பேருண்மைகளைப் பின்வரும் ஹதீஸ்களைப் படிப்பதன் மூலம்தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும்விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர்வந்து "ஈமான் என்றால் என்ன?'' என்று கேட்டார்அதற்கு நபி(ஸல்) அவர்கள் "ஈமான் என்பது, அல்லாஹ்வையும்அவனுடைய மலக்குகளையும் அவனுடைய சந்திப்பையும்அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும்,மறுமையில்)உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும்'' என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலி),ஆதாரம் : புகாரி (50)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் மற்றும் உமர்(ரலி) ஆகியோரும் மதீனாவின் வீதியொன்றில் அவனை (இப்னுஸய்யாதை)ச் சந்தித்தார்கள். அவனிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்,"நான் இறைவனின் தூதர் என நீ சாட்சியம்அளிக்கிறாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவன்,நான்இறைவனின் தூதர் என நீர் சாட்சியம் அளிக்கிறீரா?'' என்று(திருப்பிக்) கேட்டான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள்,"நான் அல்லாஹ்வையும் அவனுடையமலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் நம்பிக்கைக்கொண்டேன். நீ என்ன காண்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்குஇப்னு ஸய்யாத்,"தண்ணீரின் மீது சிம்மாசனம் ஒன்றைக்காண்கிறேன்'' என்று சொன்னான். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "நீ கடல்மீதுள்ள இப்லீஸின் சிம்மாசனத்தையேகாண்கிறாய்'' என்று கூறிவிட்டு,"இன்னும் என்ன காண்கிறாய்?''என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அல்லாஹ்விடமிருந்துசெய்திகளைக் கொண்டுவரும்) இரு உண்மையாளர்களையும்ஒரு பொய்யரையும், அல்லது இரு பொய்யர்களையும் ஓர்உண்மையாளரையும் நான் காண்கிறேன்'' என்று சொன்னான்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,"அவ னுக்குக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவனை விட்டுவிடுங்கள்'' என்றுகூறினார்கள்
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),ஆதாரம் : முஸ்லிம் (5606)

மலக்குகள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கைக் கொள்ளும்முஸ்லிம்கள், தங்களது சிந்தனைகளில் தோன்றும்விதங்களிலெல்லாம் அவர்களைப் பற்றி கண்மூடித்தனமாககற்பனைச் செய்துவிடக்கூடாது. மாறாக, அல்லாஹ்வும் அவனதுதூதரும் மலக்குகளைப் பற்றி சொன்ன விதத்தில் மட்டும்தான்நம்பிக்கைக் கொள்ள வேண்டும். ஆகவே, குர்ஆன் ஹதீஸ்களின்வாயிலாக மலக்குகளைப் பற்றி இனிக் காண்போம்.

மலக்குகளின் மூலக்கூறு

மனிதர்களின் ஆதிபிதாவான ஆதம் (அலை) அவர்களைஅல்லாஹ் களிமண்ணால் படைத்தான். ஜின்கள் என்றமற்றொரு படைப்பினத்தை நெருப்பால் படைத்தான் என்பதைநாம் அறிந்துள்ளோம். இதுபோல, அல்லாஹ் வானவர்கள் என்றஇனத்தை ஒளியால் படைத்துள்ளான். மனிதர்களாகிய நாம்அவர்களை பார்க்க இயலாது. ஆனால், அவர்களோ நம்மைப்பார்க்கும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளார்கள். இதற்கானசான்றுகளை இப்போது பார்ப்போம்.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர்."ஜின்'கள் தீப்பிழம்பின்மூலம் படைக்கப்பட்டனர்.(ஆதிமனிதர்) ஆதம், உங்களுக்கு(குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்)படைக்கப்பட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),ஆதாரம் : முஸ்லிம் (5722)

மலக்குகள் எங்கே இருக்கிறார்கள்?

பூமியில் மட்டும் வசிக்கும் விதத்தில் பல உயிரினங்கள்படைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமா? அவைகளும் நீர்வாழ்வன,நிலவாழ்வன என்று தங்களின் வாழ்விடத்தின் மூலம்வேறுபட்டவைகளாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாம்நிலத்தில் வாழ்பவைகளின் பட்டியலிலே அங்கம் வகிக்கிறோம்.நிலத்தில் வாழும் உயிரினங்களிலும் காட்டு விலங்குகள், வீட்டுவிலங்குகள் என்று வேறுபாடு காணப்படுகிறது. இத்துடன்வாழ்விடத்தின் வாயிலாக உயிரினங்களுக்கு மத்தியில் வரும்வித்தியாசம் முடிந்துவிடவில்லை. இந்த வரிசையில்மலக்குகள், பரந்து விரிந்த வானத்தை வாழ்விடமாககொண்டிருக்கும் படைப்பினமாக இருக்கிறார்கள். அதனால்தான்

அவர்களை வானவர்கள் என்றும் நாம் அழைக்கிறோம். இதோதிருக்குர்ஆன் கூறுவதை கேளுங்கள்.

 வானங்களில் எத்தனையோ மலக்குகள் உள்ளனர். தான்நாடியோருக்கு அல்லாஹ் அனுமதியளித்து பொருந்திக்கொண்டவருக்காக தவிர (மற்றவர்களுக்காக) அவர்களின்பரிந்துரை சிறிதும் பயன் தராது.
(திருக்குர்ஆன் 53 : 26)

 முன்கண்ட வேதவரிகளின் மூலம் மலக்குகள் என்ற இனத்தினர்வானத்தில் வாழ்பவர்கள் என்பதை சந்தேகமற அறிந்துக்கொண்டோம். அதேசமயம், அவர்கள் எப்போதும் எதற்காகவும்பூமிக்கு வரமாட்டார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது.பூமிக்கு சென்றுவரும்படி அவர்களுக்கு அல்லாஹ்கட்டளையிட்டால் அவர்கள் பூமிக்கும் வருவார்கள்; படைத்தவன்கொடுத்தப் பணியை குறையின்றி நிறைவேற்றுவார்கள்என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இந்தசெய்திக்குச் சான்றாக இருக்கும் இறைச் செய்திகளைப்பாருங்கள்.

(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர, (நாங்கள் பூமிக்கு) இறங்கி வரமாட்டோம். எங்களுக்குமுன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும்அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப் பவனாகஇல்லை.                         
(திருக்குர்ஆன் 19 : 64)

நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், "நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச்சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?'' என்று கேட்டார்கள்.அப்போதுதான் "(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியேதவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்குமுன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்கும் இடையேஇருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்)உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்'' எனும் (19:64ஆவது)இறைவசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)புகாரி (4731).

வஹீ அல்லாத மற்ற பணிகள்
மலக்குகள் பூமிக்கு வருவார்கள் என்று சொன்னதுமே அவர்கள்வஹீ எனும் இறைசெய்தியை கொண்டுவருவதற்காக மட்டுமேஇங்கு வருவார்கள் என்று நினைப்பதும் தவறு. அதல்லாத வேறுகாரியங்களை செய்வதற்கும் பூமிக்கு சென்று வருமாறுமலக்குகளுக்கு அல்லாஹ் கட்டளையிடுவான். பிரச்சனையைதீர்த்தல், தூதர்களுக்கு உதவுதல், நல்லடியார்களுக்கு நற்செய்திசொல்லுதல், மறுப்பாளர்களுக்கு தண்டனையை கொண்டுவருதல். நற்காரியங்களை பதிவு செய்தல் என்பது போன்றபற்பலப் பணிகளை நிறைவேற்ற வானவர்கள் வந்துசெல்வார்கள். இதற்கான ஆதாரங்களுள் ஒன்றை மட்டும்இப்போது காண்போம்.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒருசமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர்ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில்போரிடுவோம்'' என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப்போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்கமாட்டீர்கள்அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும்,பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்குஎன்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர்.

அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது, அவர்களில்சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநீதிஇழைத்தோரை அறிந்தவன். "தாலூத் என்பவரை அல்லாஹ்உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்'' என்று அவர்களின் நபிஅவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படிஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்குநாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும்வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விடஅவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்விமற்றும் உடல் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான்.

தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான்.அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார். "அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக,உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும். அதில் உங்கள்இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன நிறைவு இருக்கும்.மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச்சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள்சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால்அதில் உங்களுக்கு சான்று உள்ளது'' என்று அவர் (நபி) கூறினார்.
 (அல்குர்ஆன் 2 : 246,248)

"தாலூத்துக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டதற்குஅடையாளமாக, மக்களிடம் ஓர் அலங்காரப் பெட்டியைவானவர்கள் சுமந்து வருவார்கள் என்பதன் மூலம் வஹீஅல்லாத மற்ற மற்ற பணிகளைச் செய்வதற்கும் வானவர்கள்பூமிக்கு வந்து செல்வார்கள் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது


--
rk@+94718080883
http://rkark.blogspot.com
http://hockalmunai.blogspot.com


No comments: