இரும்பு வானிலிருந்தே இறக்கப்படுகிறது..!!என்ற குரானின் வசனங்களை நாசா விஞ்ஞானிகள் ஏற்றனர்..!!
இரும்பு வானிலிருந்து இரக்கப்பட்டதா ? ஆம்! வானிலிருந்து தான் இரக்கப்பட்டது.குர்ஆனை மெய்ப்பிக்கிறது இன்றய_விஞ்ஞானம்!
.
அல்-குர்ஆனின் அதிசயம்! மாபெரும் அறிவியல் உண்மை, இரும்பு! இந்த உலோகம் மட்டும் இல்லையெனில் மனிதனே இல்லை எனலாம், அந்த அளவுக்கு மிகவும் இன்றியைமயாத தவிர்க்கவே இயலாத அன்றாடம் பயன்படக்கூடிய உலோகம்தான் இரும்பு !
.
மனிதனின் இரத்தத்தில் இரும்பு முக்கிய கூறாகும், இரத்தத்தில் உள்ள இரும்பு ஆக்சிஜனை உடலெங்கும் உள்ள செல்களுக்கு அனுப்பி உயிர்வாழச் செய்கின்றது!
.
மனிதனின் உடலில் ஒரு ஆணி தயாரிக்கும் அளவு இரும்பு உள்ளது.
.
நிறைய ஆற்றல் உடையதுமாகும். சரி இந்த இரும்பானது எப்படிப் வந்தது? இது பூமியிலேயே நிரந்தரமாக உண்டாகி இருந்ததா ? வானிலிருந்து இறக்கப்பட்டதா ?
.
நமது தூதர்களை தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் , மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.
( அல்குர்ஆன் 57:25)
.
இவ்வசனத்தில் (57:25)
#இரும்பை_இறக்கினோம்_என்று_இறைவன்_கூறுகின்றான்
இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.
இப்பூமியிலுள்ள இரும்பு பூமியிலே உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர்.
ஒவ்வொரு தனிமங்களும் உருவாவதற்கு, அதற்கேற்ற வெப்பம் இருக்க வேண்டும். வெப்பத்தின் தன்மையைப் பொறுத்து கார்பன், சோடியம், மக்னீசியம், நியான், அலுமினியம், சிலிகான், ஈயம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் உருவாயின.
ஆனால் இரும்பு என்ற தனிமம் உருவாவதற்குத் தேவையான வெப்பம் பூமியில் எந்தவொரு காலகட்டத்திலும் இருக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப்பூமியில் கிடைக்கும் பொருட்கள் இங்கேயே உருவாவதற்கான காரணங்கள் இல்லாவிட்டால் அப்பொருள் வெளி உலகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.
30 கோடி டிகிரி வரை வெப்பமுடைய பல நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன. இந்த நட்சத்திரங்களிலிருந்து எரி கற்கள் விழும் போது அல்லது வால் நட்சத்திரங்கள் பூமியை நோக்கி விழும் போது, வளிமண்டலத்தில் அவை தடுக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. அவற்றின் துகள்கள் பூமிக்கு வந்து இறங்குகின்றன.
கோடானு கோடி ஆண்டுகளாக இப்படி விழுந்த இரும்புத் துகள்களைத்தான் பூமியிலிருந்து எடுத்துப் பயன்படுத்துகிறோம்.
இது குறித்து நாசா விஞ்ஞானிகள் பின்வருமாறு கூறுகின்றனர்.
எந்த ஒரு காலத்திலும் இரும்பை உருவாக்கும் ஆற்றல் பூமிக்கும் இருந்ததில்லை. சூரியனுக்கும் சூரியக் குடும்பம் எனப்படும் அனைத்து கோள்களுக்கும் கூட இருந்ததில்லை.
இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப் போல் நான்கு மடங்கு ஆற்றல் தேவைப்படும். எனவே பூமியில் காணப்படும் இரும்பு எங்கிருந்தோ வானத்தில் இருந்து தான் வந்திருக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இரும்பு இப்பூமியில் உற்பத்தியாகவில்லை, மேலேயிருந்து தான் இறக்கப்பட்டது என்பதை அற்புதமாக அறிவித்திருப்பதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.
அல்குரான் உலகம் அழியும் நாள் வரையிலான இறுதி வேதம் என்பதனால், அறிவியல் யுகத்தில் வசிக்கும் நமக்கும், ஏக இறைவனை மறுப்பவருக்கும், , நமக்கு பின்னால் வரும் சந்ததியினரையும் எச்சரிக்கை செய்யவே அறிவியல் சார்ந்த வசனங்களை அல்லாஹ் அமைத்திருப்பதை எம்மால் உணர முடிகின்றது !
.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
திருக்குர்ஆனில் அறிவியல்
மறுமை நாளை நோக்கி …
Copied