Wednesday, October 16, 2019

மனிதநேயம்

மனிதனாக படைக்கப்பட்டவன் நிச்சயமாக இறைவனின் அதி உயர் மற்றும் விசித்திரம் நிறைந்த ஒரு படைப்பாக பார்க்கப்படுகிறான். இந்த மனித படைப்பானது பல்வேறுபட்ட அம்சங்களை கொண்டு சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் விசித்திரமான ஒரு அங்கமாக மனிதனின் மனதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மனது பலவகையான எண்ணங்களின் பெட்டகமாக இருக்கின்றது. எது எவ்வாறு இருந்தபோதிலும் சிலருக்கு நல்ல எண்ணங்களும் சிலருக்கு கெட்ட எண்ணங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் நல்லெண்ணம் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மிகவும் நல்லவர்களாகவும் அதிகம் உதவி செய்பவர்களாகவும் மேலும் அளவுகடந்த இறைபக்தர்கள் ஆகவும் இருப்பார்கள். இதே போல் கெட்ட எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மனிதர்களில் மிகவும் கெட்டவர்களாகவும் பொறாமை மற்றும் எரிச்சல் போன்ற பல கெட்ட நடத்தை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறான மனிதர்களிடம் நாம் மிகவும் அவதானமாகவும் இறைவனிடம் பாதுகாவல் தேடுபவர்கள் ஆகவும் ஆகவும் இருக்க வேண்டும். எது எவ்வாறாயினும் நாம் இந்த உலகுக்கு வந்து ஏறத்தாழ சுமார் 60 அல்லது 70 வருடங்கள் மட்டுமே வாழ்பவர்களாக இருக்கின்றோம். இதற்குள் நாம் மனிதநேயத்தை எங்களிடத்தில் வளர்த்து நல்ல மனிதர்களாகவே மரணிக்க முயல வேண்டும். #ஆர்கே

No comments: