ஏனெனில், பெரிய பாவச்செயல்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக நடைபெறும் இடங்களில் கடையும் ஒன்றாகும். சரி எப்படி ஒரே இடத்தில் எல்லா பாவச்செயல்களும் ஒன்றாக நடக்கின்றது என்று பார்ப்போம்.
₹₹₹ பொய்:
பொய் உரைக்காமல் தற்பொழுது எந்த ஒரு வியாபாரமும் நடப்பதில்லை. வாங்குபவர் பொய் சொல்லி தனது பொருளை விற்க முனைவார் அல்லது வாங்குபவர் பொய் சொல்லி அதனை வாங்க முனைவார்.
[இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், 'பொய் கூறுவதும்' அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்' பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.
இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'பெரும் பாவங்கள்' என்று வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி : 6871.
அத்தியாயம் : 87. இழப்பீடுகள்]
₹₹₹ புறம் கூறுதல்:
ஒரு கடைக்காரரைப்பற்றி இன்னொரு கடைக்காரர் புறம் கூறாமல் எந்த ஒரு வியாபாரமும் இல்லை.
[குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
(அல்குர்ஆன் : 104:1)]
₹₹₹ ஏமாற்றுதல்:
உங்களால் வாங்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் உங்களை ஏம்மாற்றியே விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் அதுவே உண்மையாகும். உங்களால் வாங்கப்படும் எந்தப்பொருளும் உங்களிடம் கலப்படமில்லாமல் வருவதில்லை, இரசாயன நஞ்சாக்கல் இல்லாமல் வருவதில்லை, அழகாக்கப்படாமல் வருவதில்லை, ஏனெனில் பல்வேறு காரணன்ஹ்களுக்காக இவை நடைபெறுகின்றன.
[அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!' என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2117.
அத்தியாயம் : 34. வியாபாரம்]
₹₹₹ பொய்ச்சத்தியம் செய்தல்:
பொய்ச்சத்தியம் இப்போது மிக சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. தாங்கள் எவ்வளவு ஒரு பெரிய பாவம் ஒன்றை செய்கிறோம் என்று தெரியாத அளவற்கு இந்த பொய்ச்சத்தியம் மலிந்து விட்டது. இந்த சொற்கள் அல்லது சொற்றொடர்கள் இல்லாது வியாபாரம் இல்லை என்றே ஆகிவிட்டது. உதாரணமாக கடவுள் சத்தியமாக, ஆண்டவன் அறிய, அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் அறிய, வழ்ழாஹி, தழ்ழாஹி என்று பல.
[அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் ஒரு பிரமாண வாக்குமூலத்தின்போது ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய்ச்சத்தியம் செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்" என்று கூறினார்கள். அப்போதுதான் "எவர் அல்லாஹ்விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ..." என்று தொடங்கும் (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 220.
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை]
₹₹₹ வட்டி:
வட்டியில்லாத இடங்கள் மற்றும் வியாபாரத்தாபனங்கள் இல்லை என்றே கூறலாம். இதில் க்ரெடிட் கார்ட் எனும் மிகப்பெரிய வட்டி மாபியாவும் அங்குதான் உள்ளது. வட்டி பல்வேறு வடிவங்களில் உங்களை வந்து சேரும் அல்லது மற்றவர்களுக்கு நீங்கள் சேர்ப்பிப்பீர்கள் என்பது வெளிப்படையான உண்மை.
[யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:275)]
₹₹₹ விபச்சாரம்:
தொடர்ந்து எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.