பின்வரும் குர்ஆன் வசனங்களை நன்றாக கவனியுங்கள்.
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.
(அல்குர்ஆன் : 2:31)
அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:32)
“ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் : 2:33)
இறைவன் முதல் மனிதனும் நபியுமான ஆதம் (அலை) அவர்களுக்கு எல்லாப்பொருட்களின் பெயரையும் கற்றுக்கொடுத்தான் என்று சொல்லப்படுகின்றது. இந்த எல்லாப்பொருட்கள் என்பது அக்காலத்தில் இருந்த மற்றும் காட்டப்பட்ட பொருட்களா அல்லது உலகம் தொடக்கம் இறுதி நாள் வரும் வரை உள்ள பொருட்களின் பெயர்களா? இயலுமானவர்கள் இன்னும் இது சம்பந்தமாக தேடுங்கள், இங்கு சமர்ப்பியுங்கள்.
No comments:
Post a Comment