Wednesday, December 25, 2019

DARBAR (Tamil) - Chumma Kizhi (Lyric Video) | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | Subaskaran

Presenting the Official Lyric Video of 'Chumma Kizhi' from 'DARBAR (Tamil)'; Starring Rajinikanth & Nayanthara in lead roles, Music Composed by Anirudh Ravichander, Produced by Lyca Productions & Directed by AR Murugadoss.


15 Amazing Shortcuts

It is important to know the shortcuts when you are using computers since it save your time and add extra smart to you among others. Let's enjoy it.



Wednesday, October 16, 2019

குறுக்குத் தெரு சம்பவம் 4

பணம் மற்றும் இதர தேவைப்பாடுகளை தேடுவதற்கு முன் மற்றவர்களுக்கு நாங்கள் எப்படி இடைஞ்சல் இல்லாமல் வாழவேண்டும் என்பதை நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். சில வெறிபிடித்த அசிங்கங்கள் இன்னும் கூறப்போனால் அடி முட்டாள்கள் தன்னை அறிவாளிகள் என்று நம்பியிருக்கும் போலிகள் நடந்துகொள்ளும் விதங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. ஆகக்குறைந்தது முட்டாள்களுக்கு தனது மோட்டார் சைக்கிளை எவ்வாறு தனது வீட்டின் முன் நிறுத்துவது என்பது கூட தெரியாமல் உள்ளனர். நிச்சயமாக அது உங்களுடைய வீட்டுக்கு போடப்பட்ட பாதை என்றால் நீங்கள் எதுவும் செய்யலாம் ஆனால் பொதுவான ஒரு பாதையில் வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது என்பது கட்டாயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் முன் ஒரு மோட்டார் சைக்கிளை அல்லது ஒரு மோட்டார் காரை சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு ஒரு குறுக்கு தெருவில் நிறுத்துகிறார் என்பதை அவதானித்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும். இதில் வேடிக்கையும் விநோதமும் என்னவென்றால் இந்த அடிமட்ட முட்டாள்களே மற்ற முட்டாள்கள் இவர்கள் நிறுத்துவது போல் அவர்களும் நிறுத்தினால் ஒரு பூகம்பம் வரும் அளவிற்கு சண்டைக்கு வருகின்றனர். உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்கு வந்தா ரத்தம் 

Regards . . .

மனிதநேயம்

மனிதனாக படைக்கப்பட்டவன் நிச்சயமாக இறைவனின் அதி உயர் மற்றும் விசித்திரம் நிறைந்த ஒரு படைப்பாக பார்க்கப்படுகிறான். இந்த மனித படைப்பானது பல்வேறுபட்ட அம்சங்களை கொண்டு சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் விசித்திரமான ஒரு அங்கமாக மனிதனின் மனதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மனது பலவகையான எண்ணங்களின் பெட்டகமாக இருக்கின்றது. எது எவ்வாறு இருந்தபோதிலும் சிலருக்கு நல்ல எண்ணங்களும் சிலருக்கு கெட்ட எண்ணங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில் நல்லெண்ணம் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மிகவும் நல்லவர்களாகவும் அதிகம் உதவி செய்பவர்களாகவும் மேலும் அளவுகடந்த இறைபக்தர்கள் ஆகவும் இருப்பார்கள். இதே போல் கெட்ட எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் மனிதர்களில் மிகவும் கெட்டவர்களாகவும் பொறாமை மற்றும் எரிச்சல் போன்ற பல கெட்ட நடத்தை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவ்வாறான மனிதர்களிடம் நாம் மிகவும் அவதானமாகவும் இறைவனிடம் பாதுகாவல் தேடுபவர்கள் ஆகவும் ஆகவும் இருக்க வேண்டும். எது எவ்வாறாயினும் நாம் இந்த உலகுக்கு வந்து ஏறத்தாழ சுமார் 60 அல்லது 70 வருடங்கள் மட்டுமே வாழ்பவர்களாக இருக்கின்றோம். இதற்குள் நாம் மனிதநேயத்தை எங்களிடத்தில் வளர்த்து நல்ல மனிதர்களாகவே மரணிக்க முயல வேண்டும். #ஆர்கே

Saturday, September 14, 2019

நயவஞ்சகத் தனமும் மன்னிப்பும்

நயவஞ்சகத்தனம் என்பது உலகிலுள்ள மிக மோசமான பழக்கங்களில் ஒன்றாகும். மனதில் ஒரு பேச்சும் நாவில் ஒரு பேச்சும் இருப்பது நயவஞ்சகத்தனத்தின் பிரதான அறிகுறியாகும். யாரிடம் இந்த நயவஞ்சகத்தனம் வருகின்றதோ அந்த நபரை மிகவும் அவதானமாக கையாளவேண்டும் ஏனெனில் அந்த நபரின் மூலமாகவே உங்களது வாழ்க்கை அறுதியாகலாம். இந்த நயவஞ்சக தனத்தின் மூலம் இவ்வுலகில் பெரிதாக சாதிக்கக் கூடியது எதுவும் இல்லை மாறாக பல்வேறுபட்ட கருத்துக்களும் சமூக எதிர்மறையான கருத்துக்களும் அதிகமாகும். பொதுவாக இந்த நயவஞ்சகத்தனம் பெற்றோரில் இருந்து கடத்தப்படுவதாக என்று நான் நினைக்கின்றேன். பார்த்தி சரியாக இருந்தால் எப்போதும் அதன் விளைவுகள் சரியாகத்தான் இருக்கும்.

Saturday, August 31, 2019

மனம் திறத்தல்

மனம் திறந்து பேசுதல் என்பது ஒரு தனி விடயமாகும். இதில் சிறியோர் பெரியோர் ஆண்கள் பெண்கள் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி வெள்ளையன் கருப்பன் போன்ற எந்த பாகுபாடுகளும் பார்க்க தேவையில்லை மாறாக உண்மையை உண்மையாகச் சொன்னால் போதுமானதாகும். சிலவேளை நீங்கள் மனம் திறந்து பேசும் போது எதிரில் உள்ளவர் வெட்கித் தலை குனிந்தாலும் எப்பொழுதும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மனம் திறந்து பேசும் நீங்கள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை அது அவசியமும் அன்று. இதில் மிகவும் முக்கியமான கருத்து என்னவென்றால் ஒருவர் இன்னொருவருடைய தவறுகளை அவதானித்து அதற்கு தகுந்தாற்போல் நல்ல அறிவுரைகளையும் புத்திமதிகளையும் சொல்வதை எதிரே உள்ள அந்த நபர் காது தாழ்த்தி கேட்க வேண்டும் மாறாக புத்தி சொல்பவர் கதைத்துக் கொண்டிருக்கும் போது அதற்கு மேலாக குரலை உயர்த்தி பேசுவது நாகரீகத்திலும் அனாகரிகம் ஆகும். ஒருபோதும் மற்றவரை புண்படுத்தும் வகையில் உங்களுடைய எந்த நடவடிக்கைகளையும் ஒரு போதும் வைத்துக் கொள்ளாதீர்கள் ஏனென்றால் அது உங்களுக்கு உரிய தனி பாணியை மாற்றிவிடும்.
நன்றியுடன் ஆர்கே

Saturday, July 6, 2019

குறுக்குத்தெரு சம்பவம்-3

உள்ளூர் தெருக்களில் சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டும் விதம் ஒரு வகையான பீதியை கிளப்புகின்றன. அவர்களுடைய முச்சக்கரவண்டி எந்த வேகத்தில் செல்கின்றது என்று சில வேளை அவர்களுக்கே தெரியாமல் கூட இருக்கலாம் ஏனெனில் அவ் வேகமானது ராக்கெட்டின் வேகத்தைவிட மிஞ்சி விடும் போல் உள்ளது. முன்னால் வரும் வாகனங்கள் முந்த படும் வாகனங்கள் பின்னால் வரும் வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் பாதசாரிகள் என்ற எந்த வேற்றுமையும் இல்லாமல் எந்த அனுசரிப்பும் இல்லாமல் தனக்கு மட்டுமே போடப்பட்ட வீதியை போல் இவர்களின் அட்டகாசம் தலைக்குமேல் ஏறி உள்ளது. அதிலும் குறிப்பாக சில வயதுக்கு வராத ஓட்டுனர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே அதற்கு ஒப்பானவர்கள் இவர்களை தவிர யாரும் இல்லை. இன்னும் சில ஓட்டுனர்கள் தன்னை ஒரு ஹாலிவுட் கதாநாயகர்கள் என்று எண்ணிக் கொண்டோம் முச்சக்கரவண்டியை இறுதி சக்கரங்களிலும் தனி ஒரு சக்கரத்திலும் மற்றும் தலைகீழாகவும் ஒட்டி அசத்துகிறார்கள். தயவு செய்து உங்களது அசத்தல் களை ஊருக்கு வெளியில் உள்ள தோட்டத்திலோ அல்லது வயல்வெளிகளிலும் முயற்சி செய்யுங்கள் ஏனெனில் வீதியில் பாடசாலை மாணவர்களும் சிறுவர்களும் மற்றும் முதியவர்களும் பாதசாரிகள் ஆக இருக்கின்றார்கள்.

Wednesday, July 3, 2019

தொழில் செய்யும் இடம்

நீண்ட நாட்களின் பின் என்னோடு வேலை செய்யும் ஒரு நண்பரை சந்தித்தேன். நிறையவே அளாவிளாவினோம். குடும்பம், அரசியல், வேடிக்கை, வினோதம், சமகால பிரச்சனைகள், உலககிண்ண கிரிக்கட் மற்றும் தொழில் இடங்கள் போன்றன இவற்றில் அடங்கும். அவர் தான் வேலை செய்யும் இடத்தைப்பற்றி ஒரு கதை சொன்னார். அவர் இவ்வாறு ஆரம்பித்தார். "அது ஒரு அடர்ந்த காடு. இக்காட்டின் நுழைவாயிலின் ஊடாக சுமார் காலை 8 மணி அளவில் உட்சென்று மாலை 5 மணிக்குள் வெளியாக வேண்டும். சுமார் 8 மணி தொடக்கம் 9 மணி பயணத்தில் இக்காட்டினுள் மிகப் பயங்கரமான கொடூரமான மிருகங்களை சந்திக்க நேரிடும். இதுபோக மிகக் கொடிய விஷமுள்ள பாம்புகளும் உள்ளன. வழியில் பல விதமான ஆறுகளையும் கால்வாய்களையும் மலைகளையும் பெரிய ஆபத்துக்களையும் கடக்க வேண்டும். இவ்வளவும் கடந்து மாலை 5 மணிக்குள் காட்டின் மறுபக்கத்தின் வழியாக எவர் ஒருவர் வருகின்றாரோ அவரே அந்நாளில் வெற்றி பெற்றவர் ஆவார்". இவ்வாறு தனது வேலை செய்யும் இடத்தை பற்றி மிகவும் சுவைபட நண்பர் கூறினார். 樂樂樂

Monday, July 1, 2019

குறுக்கு தெரு சம்பவம் 2.

உள்ளூர் தெருக்களில் சில இடங்களில் ஸ்பீட் பிரேக்கர்ஸ் போடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு அணைக்கட்டின் உயரம் என்பது வேறு விடயம். இன்னொரு முக்கியமான விடயம் தான் இவ்வாறான ஸ்பீட் பிரேக்கர்களை வீதியின் முழு அகலத்துக்கும் போடாமல் சில இடங்களில் வீதியின் குறுக்காக அரைவாசி தூரத்துக்கு போடப்பட்டுள்ளது. மீதி அரைவாசி போடப்படாமல் உள்ள இடத்தின் ஊடாகவே ஊரில் உள்ள எல்லா வாகனங்களும் வர எத்தனிக்கின்றன. இவ் வாகனங்கள் வரும்போது சரியான பக்கத்தில் வரும் வாகனங்கள் வருகின்றனவா இல்லையா என்ற எந்த கவலையும் இல்லாமல் தன்னுடைய வாகனத்தை இந்த ஸ்பீட் பிரேக்கர் போடப்படாத இடத்தினூடாக வலுக்கட்டாயமாக செலுத்துகிறார்கள். இது பல அசௌகரியங்களை முன்னால் வரும் வாகனங்களுக்கு கொடுத்தாலும் அதைப்பற்றி எந்த ஒரு கவலையும் எமது வாகன ஓட்டுனர்கள் கொள்வதில்லை. ஆனால் இதே மாறி நடக்குமானால் மற்ற வாகன உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கு தூற்றுவதில் இவர்கள்தாம் முதலிடம். மீண்டும் எங்களுக்கு வந்தால் இரத்தம் உங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி.

குறுக்குத் தெருவில் வாகனம் நிறுத்தும் அதிபுத்திசாலிகள்.


சிறிய தெருக்கள் மற்றும் ஒழுங்கைகளில் வாகனம் நிறுத்தும் போது கொஞ்சமாவது மூளையை பாவித்து உங்களது அடங்காத வாகனங்களை நிறுத்துங்கள். ஆகக் குறைந்தது எல்லா வாகனங்களையும் ஒரே பக்கத்தில் நிறுத்துங்கள் வழியால் வரும் மற்ற வாகனங்களையும் கொஞ்சமாவது யோசியுங்கள். மற்றவருக்கு தடையாக உங்களது வாகனங்களை நிறுத்தாதீர்கள், அது துவிச்சக்கர வண்டியாயினும் சரியே !!!

இவ்வளவு செய்து போட்டு மற்றவர்கள் அதை செய்தால் உங்களுக்கு கோபம் வேற வருகின்றது. #தனக்கு #வந்தால் #இரத்தம் #மற்றவனுக்கு #வந்தால் #தக்காளி #சட்னியா ? ? ?
இனியாவது திருந்துங்கள் ! ! !